Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Friday, April 06, 2012

ஏன் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது?



செக்ஸ் என்பது சந்தோஷமான ஓர் அனுபவம் என்றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான்நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள்கருத்து.

ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது. தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.

காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெண், ஆண் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும்.

ஓதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

ஆண் பெண் இருவருக்கும் பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.

அடிக்கடி தவறு செய்யத் தூண்டும்.

சரியான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் எடுக்கப்படாதபட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம்.

எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதலில் செக்ஸ் கிடைத்துவிட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள்எதுவும் இருக்காது. பெரும் ஆர்வமும் இருக்காது

பெண் யார் கேட்டாலும் உறவுக்க சம்மதிப்பவராக இருப்பார் என்ற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும்.

திருமணம் முடித்த பின்னர் அவர்களுக்குள் புதிதாக ஒன்றுமில்லை என்பதால் அதற்காக அவசரப்படுதல் நின்றுபோய்விடும். பெண் அதற்குப் பின் அதிகமாக அவசரப்படுபவளாகவும், ஆண் நழுவுபவனாகவும் இருப்பான்.

காதலர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவது சகஜம்தான். அப்படிப்பட்ட நேரத்தில் செக்ஸ¤க்கு சம்மதித்தது பற்றி கேவலமாக பேசப்பட்டுவிட்டால் காதல் முறிந்துபோய்விடும்

செக்ஸ் உறவு முழுமையானதாக இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிறர் மீது சந்தேகம் வந்துவிடும். செக்ஸ் திருப்தி தர முடியாத இவருடன் எப்படி வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும்.

மீண்டும் ஒருமுறை சம்மதிக்காவிட்டால், புதுசா என்ன என்பது போன்ற பேச்சுக்கள் வந்துவிட்டால் காதலில் மரியாதையும், அன்பும் காணாமல் போய்விடும்.

இருவருக்குள்ளும் செக்ஸ் உறவு இருக்கிறது என்பது பிறருக்குத் தெரிந்தால் அவர்களை காதலர்கள் என்று பார்க்காமல் செக்ஸ் உறவுக்காக அலைபவர்கள் என்று தவறுதலாகவே பேசுவார்கள்.

ஆண், பெண் இருவரிடமும் ஒரு அவநம்பிக்கை வந்துவிடும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். தேவையில்லாமல்அவசரப்பட்டுவிட்டோமே என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.

ஒருவேளை காதலரை கைப்பிடிக்க முடியாமல் போய்விட்டால், வேறொருவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு கற்பினை காணிக்கையாகத் தரமுடியாமல், ஓர் எச்சில் பண்டமாக தன்னுடைய உடலை கருத வேண்டிவரும்.

No comments:

Post a Comment