Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Saturday, April 28, 2012

ஏடா கூடாமான உறவுகள் வேண்டாமே ?



இப்படியெல்லாமா காதல் என்பது இருக்கும் என்று பலர் அதிசயிப்பார்கள்.



ஆணும் ஆணும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது என்பதெல்லாம் ஏதோ ஒரு புரட்சி என்று தோன்றுமே தவிர, இது காதல் கிடையாது. உடலில் ஜீன்கள் செய்யும் சேட்டை அவ்வளவுதான். 


இதுபோலவே தவறான உறவு முறைகளுக்குள் உண்டாகும் காதலும் ஏடாகூடக் காதலே. அண்ணன் உறவு முறை, தகப்பன் மகள் உறவு முறை போன்றவற்றில் காதல் ஏற்பட்டுவிட்டது என்பதை சமூகம் ஒப்புக்கொள்ளாது. 


உண்மையில் என் சகோதரரை காதலிக்கிறேன் என்பது சம்பந்தப்பட்டப் பெண்ணைப் பொறுத்தவரை அக்மார்க் நிஜமாகவே இருக்கலாம். ஆனால், அதற்கான இதனை காதல் எனும் வரிசையில் சேர்ப்பித்துவிட முடியாது. 


பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகும் உறவு முறைகளைக் காதல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட காதலில் இருந்தும் வெளியேறுவதுதான் நல்லது. உண்மைக் காதல் என இதனைக் கடைசி வரை கடைப்பிடிக்க நினைத்தால் கண்டிப்பாக பிற்காலத்தில் முன்னர் செய்த காதலுக்காக வருத்தப்பட வேண்டியிருக்கும்.



 


திருமணக் காதலர்கள்

குறிப்பாக நம் நாட்டைப் பொறுத்தவரை மிக அதிகமான திருமணம் என்பது பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணமாகும். 


திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழையும் வரை ஒருவரை ஒருவர் முழுசாக பார்த்து கூட இருக்கமாட்டார்கள். ஒரு வார்த்தை கூட பேசியிருக்க வாய்ப்பிருக்காது. ஆனால் காலத்தின் கட்டாயமாக வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டிய ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். 


உறவுகளுக்காகவும், சமுதாயத்தின் கட்டாயத்திற்காகவும் சேர்ந்து வாழும் பெரும்பாலான தம்பதியர்கள் கடமைக்காக கணவன்-மனைவியாக வாழ்கின்றனர். இதில் காதல் என்பது அபூர்வமாக ஒரு சிலரிடமே பூக்கிறது. 


கணவன்-மனைவி இருவரும் காதலர்களாக கடைசி வரை சந்தோஷமாக வாழமுடியும் என்ற உண்மை நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஓர் ஆணால் இன்னொரு பெண்ணைத் தேர்வு செய்ய முடியாது என்பதும், அந்தப் பெண் வேறு வழியின்றி கணவனாக வந்திருக்கும் ஆணை மட்டுமே காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் தவிர, மற்ற எல்லா விஷயங்களும் காதலர்களைப் போலவே இவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.

No comments:

Post a Comment