Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Friday, April 06, 2012

உடலுறவை வெறுக்கும் பெண்ணின் கதை!



மேன்மை மிகு அம்மாவுக்கு,

தங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. நவ., 21, 2001ல் தொலைந்து போன என் வாழ்க்கைக்கு, எங்கு தேடியும் பலன் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு தங்களால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

அம்மா... நான் திருமணம் செய்திருப்பது, என் அம்மாவின் அண்ணன் மகளைத்தான். எம்.., எம்.பில்., பி.எட்., ஆங்கில இலக்கியம் படித்து, அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். நான் டிப்ளமோ முடித்து, ஒரு டிராக்டர் கம்பெனியில், பார்ம் எக்சி கியூட்டிவாக வேலை செய் கிறேன். பணத் திற்கோ, பண்பிற்கோ, பாசத்திற்கோ இறைவன் எந்த குறையும் வைக்கவில்லை.

குடும்பத்தில் எல்லாரிடமும்அதிகமான பாசம் வைத்திருப்பது நான் மட்டும்தான். அதே போல், பெரியவர் முதல், சின்னக் குழந்தை வரை பாசம் வைத்திருப்பது என்னிடம் மட்டும்தான்.

எனக்கு ஏதேனும் நேர்ந்தால், எல்லாரும் துடித்துப் போவர். எனக்கு பெண் கொடுத்த என் தாய் மாமா திருமணம் செய்திருப்பது, அவரது தாய் மாமாவின் மகளை. எனக்கு என் மாமாவின் மகளை திருமணம் செய்து வைப்பதற்கு, என் தங்கை களுக்கோ, என் பெரியம்மா, சித்திக்@கா, இவர்களது குழந்தைகளுக்கோ, குடும்பத்தார்களுக்கோ, என் நண்பர்களுக்கோ பிடிக்கவில்லை. ஏனென்றால், என் குணத்திற்கும், என் மனைவி குணத்திற்கும் ஒத்துப் போகாது என்பது எல்லாருக்கும்தெரியும். ஆனால், அவளோ என்னைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தாள். என் அத்தைக்கும், எனக்கு திருமணம் செய்து கொடுக்கத்தான் விருப்பம்; என், தந்தைக்கும், மாமாவிற்கும்விருப்பம் இல்லை. இருந்த போதிலும், யாரையோ திருமணம் செய்து கொள்ளத்தான்போகிறோம்; அதற்கு ஆசைப் படுகிற பெண்ணை கட்டிக் கொள்ளலாம் என, நானும், என் அம்மாவும், முடிவு செய்து, எல்லாருடைய சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த அன்று இரவே, அவள் எண்ணத்தை சொன்னாள். என்னவென்றால், "திருமண பந்தத்தில் இப்படி தாம்பத்யம் என்ற சடங்கு இருக்குமாயின், இதற்கு நான் சம்மதம் தெரிவித்திருக்கமாட்டேன்...' என்று.

என் இதயமெனும் தாஜ்மஹாலில், என் மனைவி, மக்களுக்காக நான் கட்டியிருந்தகற்பனைக் கோட்டையில், விரிசல் விழுந்தது. இருந்த போதிலும், என் சகோதரிகளுக்குஇதுமாதிரி நேர்ந்திருந்தால்அதை எப்படி சாதுர்யமாக சரி செய்வோமோ, அதே போல் சரி செய்வதென முடிவு செய்தேன். நான்கு மாதங்கள் கடந்தன. எனக்கு என்ன செய்வதென்றேதெரியவில்லை.

உயிர் காப்பான் தோழன் என்பர்... உண்மை. அவர்களுக்கு இதயமே ஒரு கணம் நின்று விட்டது. உடனே இதை பெண்ணின் தந்தையிடம் தெரியப்படுத்தினோம். என் மனைவியின் நிலைமையை கடிதத்தில் எழுதி, அவளை ஒன்றும் கேட்க வேண்டாம், அவளுக்கு புரியும்வரை காத்திருப்பதாக எழுதியிருந்தேன்.

என் மாமாவோ, தன் மகளை யாரும் குறைகூறி விடுவரோ என்ற பயத்தில், என்னை எதிரியாக பாவிக்கலானார். எல்லாரும் (உறவினர்கள்) அவளுக்கு அறிவுரை சொல்ல, என் மனைவியோ, தன்னை மகளாக பாவித்த மாமன், மாமியாரை கொடுமைக்காரர்கள் என புறம் தள்ளினாள். காலங்கள் கரைந்தன; கனிவதாக தெரியவில்லை. எனக்கு விவாகரத்து தருவதற்கும் மறுக்கின்றனர். வேறு திருமணமும் செய்ய வழியில்லை. எல்லாரும் பெண் தர காத்திருக்கின்றனர். ஆனால், என் மனைவிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை, சட்டபூர்வமாக கேட்கின்றனர்.

என்னைப் புரிந்து, என் நிலைமையை தெரிந்து, என் வாழ்விற்கு வழி வகுக்கும் பெண்ணிற்கு, நான் உள்ளன்போடும், உண்மையுள்ளவனாகவும் இருப்பேன். அந்த பெண்ணிடமிருந்து நல்ல பண்புகளை மட்டுமே எதிர்பார்க்கிறேன்; வேறு எதுவும் வேண்டாம்.

No comments:

Post a Comment