Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Tuesday, December 04, 2012

ஆள் மாறாட்டம்

ஆள் நடமாட்டமேயில்லை! அது சரி! மண்டை பிளக்கும் சென்னை K.k. நகர் வெய்யிலில் இந்த பார்க்கிற்கு யார் வரப்போகிறார்கள். அவர்களுக்கு என்ன தலையெழுத்தா! கை கடிகாரத்தை பார்த்தேன் ... மணி 3.45. பார்க்கின் உள்ளே போகலாமா ..இல்லை வாசலிலேயே நிற்கலாமா என்று முடிவு எடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தேன்.

ஜஸ்ட் எ மினிட்.. என்னை பற்றி.. நான் ராகேஷ் குமார். வயது 24. நல்ல உயரம். தலையில் நிறைய முடி.. ஆனால் கொஞ்சம் அறிவு (இது என் அப்பா அடிக்கடி சொல்வது!). உங்கள் பக்கத்து வீட்டில் அடிக்கடி நீங்கள் பார்க்கும் இளைஞர்களை போல இருப்பேன் நான். தொழில் அதிபரான என் அப்பா சஞ்ஜீவ் குமாருக்கு ஒரே வாரிசு! இப்போதுதான் நான் வீட்டை விட்டு ஓடி வந்தேன். வந்து நாலு மணி நேரம்தான் ஆனது...திரும்ப வீட்டுக்கு போக கூடாது என்பது என் இப்போதய தீர்மானம்.

ஏன்...

இந்த அப்பாவிற்கு வேறு வேலையில்லை, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒரு தொழிற்சாலையை கட்டிவிட்டு அதை மேனேஜ் செய், அதை பார், இதை செய் என்று ஒரே அட்வைஸ்.... நோ என்றால் தண்டசோறு, தீவட்டி தடியன் என்று ஒரே பட்டப்பெயர் வழங்கல்... அதான் வீட்டுக்கே வருவதில்லை என்று வந்து விட்டேன். வந்த பிறகுதான் தெரிகிறது ஒரு நாளைக்கு கூட காலம் ஓட்ட முடியாது என்று... பேசாமல் வீட்டுக்கு போகலாமா என்றால் சுய கௌரவம் தடுக்கிறது...

அப்போது சர்ர்ர்ர்ர் என்று ஒரு கார் வந்து நின்றது...

"ஹாய் சுரேஷ்" என்று கார் கதவை திறந்தபடியே ஒரு குரல்...

நிமிர்ந்து பார்த்த நான் அசந்து விட்டேன். ஒரு அழகு தேவதை முன்னால் நின்றுக்கொண்டு இருந்தது. நல்ல ஆறு அடி உயரம். வயது 19 அல்லது 20 இருக்கும்.ரத்த சிவப்பு சாரி கட்டி இருந்தாள். அவள் நல்ல சிவப்பு. சின்னதாக கொண்டையிட்டு இருந்தாள். தலையின் ஓரத்தில் ஒரு ரோஜா பூ. லேசாக லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். உதடுகளில் லேசான ப்ளாஸ்டிக் புன்னகை..ஒற்றை செயின், பெரியதான காது வளையம், கறுப்பு லெதர் ஸ்ட்ராப் வாட்ச்.

இந்த சிவப்பு சாரியில் அவள் அழகு மேலும் பிரகாசித்தது. சாரியில் முழுதும் சிறிய , சிறிய பூக்கள். அதே கலரில் ப்ளவுஸ் அணிந்து இருந்தாள். கை வைக்காத பளவுஸ் அவள் மார்பு கலசங்களை அடக்க முயன்று முடியாமல் மேலிருக்கும் பிளவை காட்டியது. அவள் உதடுகள், கன்னங்கள். கழித்து எல்லாம் வர்ணிப்பது என்றால் ஒரே வார்த்தை இளமை, இளமை, இளமை....

யார் இது ஆறு அடி சந்தனகட்டை என்று திணறினேன்.

"என்னடா முழிக்கறே" என்றாள்.

டா போட்டு பேசறாளே.. ஒரு வேளை நம்முடன் ஸ்கூலில் படித்தாளோ? இருக்காதே..கூட படிக்கும் பெண்ணை பார்க்காதவன் இல்லையே நான்..என்று மனம் மாரத்தான் ரேஸில் ஓடியது.

"என்னை விட்டு விட்டு எங்கடா போயிட்டே" என்றது அந்த நைஸ் நைன்டீன்..

அவள் அப்படி கேட்டவுடன் எனக்கு தூக்கி வாரிப்போட்டது...இது ஏதோ ஆள் மாறாட்ட கேஸ்.. என்றது மனம்.

"வந்து யார் நீங்கள். உங்களை எனக்கு தெரியாதே" என்று இழுத்தேன்..

"அடப்பாவி! தெரியாதா. நான் சுஜிதா கல்லூரியில் இழைந்து, இழைந்து என் கன்னத்தில் பாதி எடுத்து விட்டு அன்று மகாபலிபுரத்தில்..." என்று அநியாயத்துக்கும் வெட்கப்பட்டாள்.

No comments:

Post a Comment