Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks
Showing posts with label ஆண்களின் ஆண்மையை அழித்துவிடும் செயல்கள். Show all posts
Showing posts with label ஆண்களின் ஆண்மையை அழித்துவிடும் செயல்கள். Show all posts

Monday, May 06, 2013

ஆண்களின் ஆண்மையை அழித்துவிடும் செயல்கள்


இன்றைய  நவீன  காலத்தில் தம்மிடம் அனைத்து வசதிகள் இருந்தாலும், சிலருக்கு முக்கியமான பிரச்சனை ஏதாவது இருக்கும். ஏனெனில் இந்த  நவீன காலத்தில் அனைத்துமே மிகவும் மார்டனாக மாறிவிட்டது. அதாவது உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, நடைமுறை பழக்கவழக்கங்கள் போன்ற அனைத்திலுமே வித்தியாசத்தை காணலாம். அந்த வித்தியாசத்தினால், பலருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் அந்த வித்தியாசமானது ஆரோக்கியமற்றது.

மேலும் என்ன தான் துணையுடன் உறவில் ஈடுபட்டு, நிம்மதியை உணர்ந்தாலும், சிலரால் கர்ப்பமாக முடியவில்லை. இதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இருவரின் மீதுமே குற்றமானது இருக்கும். அதுமட்டுமின்றி என்ன தான் முயற்சித்தாலும் கர்ப்பமாக முடியாத நிலையில் சிலர் இருப்பர். இதற்கு பெரும் காரணம் நடவடிக்கை மற்றும் பழக்கவழக்கங்கள் தான். அதிலும் ஆண்களால் தான் பெரும் கஷ்டம் ஏற்படும். ஏனெனில் அவர்களின் ஒருசில செயல்களால் இந்திரிய  உற்பத்தி பாதிக்கப்பட்டு, கர்ப்பமாவதில் தடையை ஏற்படுத்துகின்றன. இப்போது அந்த மாதிரியான செயல்களில், ஆண்களின் எந்த செயல்கள் கர்ப்பத்திற்கு தடையை உண்டாக்குகின்றன என்பதைப் பார்ப்போமா!!!

சுடு நீர் தொட்டி குளியல்
சுடு நீர் தொட்டியில் குளித்தால், உடலில் உற்பத்தி செய்யப்படும் இந்திரிய எண்ணிக்கை குறையும். எப்படியெனில் பொதுவாக ஆண்களின் விரைகள் எப்போதும் மற்ற உறுப்புகளை விட சற்று குளிர்ச்சியாக இருக்கும், இருக்கவும் வேண்டும். ஆனால் அவ்வாறு குளிர்ச்சியின்றி, விரைகளின் வெப்பமானது 98 டிகிரிக்கு மேல் அதிகரித்தால், அந்த வெப்பம் ஆண்களின் இந்திரிய அளவை அழித்துவிடும். ஆகவே ஆண்கள் குழந்தைகள் பெற நினைக்கும் போது, சுடு நீர் தொட்டிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

உள்ளாடை
நிறைய ஆய்வில் மிகவும் இறுக்கமாக இருக்கும் உள்ளாடைகளை அணிந்தால், இந்திரிய உற்பத்தி தடைபடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு நீண்ட நேரம் இறுக்கமான உள்ளாடையை அணிவதால், விரைகள் அதிக வெப்பமடைந்து, இந்திரிய எண்ணிக்கையை குறைத்துவிடுகிறது. எனவே எப்போதும் லூசாக இருக்கும் உள்ளாடையை அணிய வேண்டும்.

மொபைல்
குழந்தை பெற நினைக்கும் போது, அதிகமாக மொபைல் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். அதிலும் ஒரு ஆய்வில் ஆண்கள் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து மொபைலை பயன்படுத்தினால். இந்திரிய உற்பத்தி குறையும் என்று கூறுகிறது. ஏனெனில் ஆண்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைலை, எப்போதுமே பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலிலிருந்து வரும் அதிர்வுகள், விரைகளை பாதிக்கிறது. எனவே தான், இந்திரியங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைக்காமல் இருப்பது நல்லது.

அதிக எடை
இன்றைய காலத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்த வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் அவர்களின் உடல் எடை அதிகரித்துவிடுவதோடு, அதன் காரணமாக பாலியல் சுரப்பிகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. பெண்கள் குண்டாக இருந்தால், அவர்களது ஈஸ்ட்ரோஜெனின் அளவு அதிகரிக்கும். ஆனால் அதுவே ஆண்கள் குண்டாக இருந்தால், அதுஇந்திரிய எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே ஆண்கள் எப்போதும் தங்கள் உடல் எடையின் மீது அதிக கவனம் செலுத்துவதோடு, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.

மதுபானம் 
மதுபானம் பருகுவதை, குழந்தைப் பெறுவதற்கு முயற்சிக்கும் போது குறைத்துவிட வேண்டும். ஏனெனில் அந்த ஆல்கஹால் ஆண்களின் இந்திரிய உற்பத்திக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எப்படியெனில் மதுபானம்  ருகினால், உடலானது இந்திரிய உற்பத்திக்கு தேவையான ஜிங்க் சத்தை உறிஞ்சவிடாமல் செய்துவிடும். ஆகவே குழந்தை பெறும் வரை இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.