Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Saturday, September 13, 2014

மாதவிலக்குக்கு உலர் திராட்சையில் தீர்வு

During the premenstrual women more pain, more bleeding, constipation, etc., are likely to occur.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக வயிற்றுவலி, கூடுதல் ரத்தப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாதவிலக்கின்  போது ஏற்படும் பிரச்னைகளுக்கு இன்று பல்வேறு ஆங்கில மருத்துவங்கள் உள்ளது. இருப்பினும் ஆங்கில மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படும்  வாய்ப்புகளும் உள்ளது. தற்போதைய நாகரீக உலகில் அனைவரும் ஆங்கில மருந்துகளையே பெரிதும் நாடுகின்றனர். ஆனால் இயற்கை நமக்கு  அளித்துள்ள காய்கனி வகைகள் நோய்களை போக்கும் அரிய மருந்தாக இருப்பதை இன்று பெரும்பாலானவர்கள் மறந்துவிட்டனர். 

மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி பிரச்னைக்கு சமையலுக்கு பயன்படுத்தும் உலர் திராட்சைகளை பயன்படுத்தலாம். பொதுவாக கறுப்பு,  பச்சை திராட்சைகள், பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, விதையில்லா திராட்சை என பலவகைகள் உண்டு. இவை  அனைத்திலும் “வைட்டமின் பி” சத்துகள் அதிகம் உள்ளது. இவ்வகை திராட்சைகளை காட்டிலும், உலர் திராட்சையில் “வைட்டமின் பி, சுண்ணாம்பு”  சத்துகள் அதிகம் உள்ளது. இந்த சத்துகள் மாதவிலக்கின் போது பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி பிரச்னையை போக்கும். 

இதை அப்படியே சாப்பிடக்கூடாது. உலர் திராட்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின்னர் அதில் இருக்கும் திராட்சைகளை நன்கு பிழிய  வேண்டும். உலர் திராட்சை கலந்த நீர் கசாயம் போல் மாறும். இதை மாதவிலக்கு உள்ள பெண்கள் குடிக்கும் போது வயிற்றுவலி பறந்து போகும்.  உலர் திராட்சை பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலிக்கு மட்டும் மருந்தல்ல, இதை காட்டிலும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு  அதிக சக்தியை தரும் ஒரு மருந்தாகவும் இது உள்ளது. பெண்களின் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள்  அனைத்தும் தாயின் மூலம் கிடைக்கும். 

இதனால், தாயின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்து  வருவதன் மூலம் அதிக ஊட்டசத்தையும், ஆரோக்கியத்தையும் பெறலாம். இதனால், குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும். உலர் திராட்சையை  பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், எடைகுறைவான குழந்தை பிறக்க வாய்ப்புகள் குறைவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தினமும் உலர் திராட்சையை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று, இளமை தோற்றத்துடன் காட்சியளிக்கும். 

No comments:

Post a Comment