Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Monday, May 06, 2013

ஆண்களுக்கு விரைவாக தாடி மீசை வளர வேண்டுமா?


தற்போது ஃபேஷனானது அதிகரித்து வருகிறது. அதிலும் இதுவரை உடைகள், ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் தான் ஃபேஷன் இருந்தது. மேலும் இதுவரை ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியுமாறு வைப்பது என்று இருந்தார்கள். ஆனால் இப்போது ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடியை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சிலரால் நல்ல அடர்த்தியான மீசையை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தால், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கு, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பார்க்கலாமே!!! 

புரோட்டீன் உணவுகள் 
உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

அடிக்கடி ஷேவிங் 
மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், வளர்ச்சியானது அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய்
மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியாக வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வது தான். இதனால் அங்குள்ள இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்கள் வலுவோடு வளர்ச்சி பெறும்.

டெஸ்டோஸ்டிரோன் 
என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் குறைவாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க்கடலை, எள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தண்ணீர்
உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

போதுமான தூக்கம் 
தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழுதுகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை வைத்தியம்
ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.

No comments:

Post a Comment