Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Monday, September 24, 2012

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்!

திருமணத்திற்கு தேவை கவுன்சிலிங்! மனநல ஆலோசகர் லட்சும ணன்: பல திருமண வாழ்க் கை, தளிர் நிலையிலேயே கரு கிப் போவதற்கு காரணம், பர ஸ்பரம் புரிதல் இல்லாமை தா ன். அதனால் தான், காதல் திரு மணமோ, பெரியோர் நிச்சயித் த திருமணமோ, எதுவானாலு ம், “கவுன்சிலிங்’ அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள்,
திருமணத் திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தி ல், பெண்ணும், பையனும் பேசி, ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள் வது ஆரோக்கியமான விஷயம். ஆனால், அப்போது இருவரும் தங்களின் குணங்க ளையும், குறைகளையும் வெளிப் படையா க பேசுவதில்லை. தன்னை தியாகியாகவு ம், உதவும் குணமுடைய ஆளாகவும் காட் டிக் கொள்வர். திருமணத் திற்குப் பின், இயல்பான வாழ்க்கைச் சூழலால், மெல்ல அவர்களின் உண்மையான குணத் தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம் பிப்பர். கணவனின் முன்கோபம், புது மனைவியை நிலை குலைய வைக்கும்; அடிக்கடி சந்தேகப்படும் மனைவியின் குணம், புதுக் கணவனை கதி கலங்க வை க்கும். இப்படி ஆரம்பிக்கும் விரிசல், திரும ண வாழ்க்கையில், மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். அப்போ து தடுமாறாமல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள, திருமணத் திற்கு முந்தைய, “கவுன்சிலிங்’ அவசியம். திருமணத்திற்கு பிந்தைய, “கவுன்சிலிங்கில், தாம்பத்தி ம் பற்றிய அலசல் மிக மிக முக்கி யமானது. காரணம், திருமண வாழ்க்கையில், அதனால் ஏற்ப டும் தகராறு, பெரிய விளைவு களை ஏற்படுத்தும். அதனால், இருவரிடமும், “செக்ஸ்’ பற்றி அவர்களின் கருத்தை, எதிர்பா ர்ப்பை அலசுவோம். “செக்ஸ்’ பற்றி புரிதலே இல்லாமல் இரு ப்பவர்களுக்கு, “கவுன்சிலிங்’கும், பிரச்னைகளைப் பொறுத்து, மரு த்துவத்தீர்வுகளையும் கொடுப்போம். திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும், சம்ப ந்தப்பட்ட தம்பதியால், தங்களுக்குள் பேசி பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்ற கட்டத்தில், தாமதிக் காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை அணுகவேண்டும். இதனால், வாழ்க்கை யை அழகாகவும், பத்திரமாகவும் மாற்றலாம்.

No comments:

Post a Comment