Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Sunday, September 21, 2014

செக்ஸ் அடிமை

குடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல் அன்றாட சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். இது ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரணடுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுபடுவதை காணமுடியும். கீழ்கண்ட செயல்பாடுகளை காண நேர்ந்தால் அது செக்ஸ் அடிமை நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.

* அடிக்கடி சுய இன்பம் காணுதல்
* பலடவேறு உறவுகள் 
* எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்
* போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்
* எக்ஸ்பிஸனிசம் எனபப்டும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பை காட்டுவதில் ஆனந்தம் அடைதல்
* செக்ஸ் துன்புறுத்துதல் 
* கற்பழித்தல்
* அதிக பாட்னர்களை விரும்புதல்

இது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.  இல்லையெனில் உடல்நலம், பணம், சமுதாயச் சிக்கல், ஏற்படுவது மடடுமின்றி காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் - மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆகும். இதை மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். 

பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிகக் குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்ஃபோமேனியா என்று சொல்வார்கள். இந்த குறைபாட்டால்தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களை பயமுறுத்துகின்றன. 

எப்படியானும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது. செக்ஸில் தவறான அணுகுமுறையை கடைபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். 

No comments:

Post a Comment