Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Monday, April 14, 2014

ஆயக்கலைகள் 64


இந்த தளம் துவங்கப்பட்ட நோக்கம் என்னவெனில்......
(சும்மா வெட்டியாதாங்க... எத்தனைநாளைக்குதான் நாம வேலை வெட்டி இல்லாம இருக்குறது??)

தளத்திற்கு பெயர் எல்லாம் வெச்சாச்சு.. அப்பறம் அது சம்பந்தமா, ஒரு பதிப்பாவது எழுதலனா எப்படி???
நான் என்ன சொல்ல வர்றேன்'னு புரிஞ்சிருக்கும்..

ஆயக்கலைகள்64 னு சொல்லிட்டு, அந்த கலைகள் என்னன்னு சொல்லலேன்னா எப்படி??


        

காமசாஸ்திரம் சொல்லக்கூடிய அந்த 64 கலைகள் இதோ :

1. பாடுதல்

2. இசைக்கருவிகள் வாசித்தல்

3. நடனம்

4. இசை மற்றும் நடனத்துடன் பாடுதல்

5.  கட்டுரை எழுதுதல் மற்றும் வரைதல்

6. பச்சை குத்தும் கலை

7. மலர் கொண்டு சிலை அலங்காரம் செய்தல்

8.  படுக்கை அல்லது தரையில் மலர் தூவும் கலை

9. ஆடைகள் , நகம் மற்றும் உடலில் தாவரங்களின் சாயத்தால் வர்ணம் செய்தல்

10. வண்ண கண்ணாடி ஓடுகளை தரையில் நிர்ணயம் செய்தல்

11. படுக்கை தயாரிக்கும் கலை

12. கண்ணாடிகளை தண்ணீரில் அடித்து இசை உருவாக்குதல்

13. தேக்கங்களில் தண்ணீர் சேகரிக்கும் கலை

14. படங்கள் (ஓவியங்கள் ) உருவாக்கி அலங்கரிக்கும் கலை

15. கழுத்தணிகள், மாலைகள் உருவாக்குதல்

16. தலைப்பாகை கட்டுதல்

17. மேடை  விளையாட்டு

18. காதணிகள்  செய்யும் கலை

19. வாசனைத்திரவியங்கள்  தயாரிக்கும் கலை

20.  உடையில் இருக்கும் நகைகள், அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களை பாதுகாக்கும் கலை

21. மந்திர வித்தை (மாந்திரீகம்)

22. கைத்தொழில்கள் (கைத்திறன்)

23. சமையல் கலை

24. பழச்சாறு மற்றும் பானங்கள் தயாரிக்கும் கலை

25. தையல் கலை

26. நூலிலிருந்து கைவினைப்பொருட்கள் உருவாக்கும் கலை

27. புதிர்கள் மற்றும் ரகசியக்குறியீடுகளுக்கு விடை கண்டறியும் திறன்

28.  வார்த்தை மற்றும் பாடல் விளையாட்டு ( ஒரு பாடலின் கடைசி எழுத்தில் அடுத்த பாடலை துவங்குதல்)

29. மிமிக்க்ரி ( இயற்கை ஒலிகளைபோல ஒலி எழுப்புதல் )

30. வாசித்தல், பஜனை செய்தல் மற்றும் குரலில் ஏற்ற இறக்கம் செய்தல்

31. பன்மொழி திறன்

32. தற்காப்புக்கலைகள் (வாள், வில் மற்றும் அம்பு எறிதல்)

33. கொடுக்கப்பட்ட உண்மைகளில் இருந்து தருக்க முடிவுகளை அறிதல்

34. தச்சுவேலை

35. கட்டிடக்கலை

36. தங்கம் , வெள்ளி மற்றும் மணிக்கற்கள் பற்றிய அறிவு

37. வேதியியல் (பொருட்களின் பண்புகள் பற்றிய அறிவு)

38. நகைகள் மற்றும் மணிகளில் நிறம் சேர்க்கும் கலை

39. சுரங்கங்கள் பற்றிய அறிவு

40. தோட்டக்கலை

41. சேவற்சண்டை கலை (சேவல்களை வெற்றி பெற தயார் செய்வது)

42. கிளிகளுக்கு பேச கற்றுக்கொடுத்தல்

43. உடல் மற்றும் தலைமுடியில் வாசனைத்திரவியங்கள் பயன்படுத்துதல்

44. குறியீட்டு மொழியைப் புரிந்து கொள்ளுதல்

45. தற்செயல் சொல்மாற்று வித்தை (பேசும் போது வேண்டுமென்றே வார்த்தைகள் கடிதங்களை நிலையை மாற்றுதல்)

46. மொழிகள் பற்றிய அறிவு

47. மலர் ரதங்கள் உருவாக்கும் அறிவு

48. தீவினைகள் தவிர்க்க விசித்திரமான கிராபிக்ஸ், அழகியல்களையும் மந்திர வழிகளில் செய்யும் அறிவு

49. மனபயிற்சிகள்

50. கவிதை எழுதுதல்

51. அகராதிகள் மற்றும் சொல்லகராதிகள் பற்றிய அறிவு

52. ஆள்மாறாட்ட கலை

53. பொருள்மாறாட்டம் செய்யும் கலை (பருத்தியை பட்டு போல தோன்ற செய்வது)

54. சூதாட்ட அறிவு

55. மற்றவர்களின் உடைமைகளைப் பறிப்பதற்கு மந்திரங்களை பயன்படுத்தும் வித்தை

56. விளையாட்டுத்திறன்

57. சமூக நடத்தை, பாராட்டுக்கள் அனுப்புதல் மற்றும் மரியாதை செலுத்தும் கலை

58. போர் அறிவு, ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தை பயன்படுத்தும் திறன்

59. ஜிம்னாஸ்டிக்ஸ் வித்தை

60. ஒரு நபரின் நடத்தையை வைத்து, உண்மையான குணம் கண்டறியும் திறன்

61. வசனங்களை உச்சரிக்கும் மற்றும் எழுதும் திறன்

62. கணிதப்புதிர்களை அணுகும் திறன்

63. செயற்கை பூக்கள் உருவாக்குதல்

64. களிமண் கொண்டு சிற்பங்கள் உருவாக்கும் திறன் 

No comments:

Post a Comment