Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Wednesday, May 30, 2012

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள்
சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும்

முகவறட்சி போக்க:
கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வறட்சி  மாறும்.

வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.


உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.

கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.

இப்போது ஆடைகளை பற்றி பார்ப்போம்
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆண்கள் ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.
நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது

நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும்

சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன்...அழகாக  இருக்கும்

ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும்

கல்லுரிக்கு போகும் ஆணா நீங்கள்?
டீ-ஷர்ட் போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டால், அசத்தலாக இருக்கும்.

வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க .

,மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு….

ஆகையால்

இனிமையாக  பேசுங்க, சிரித்தமுகத்துடன் இருங்க... நீங்க அழகா இருப்பிங்க

No comments:

Post a Comment